Tamil Poetry மரபுக் கவிதைகள்

மலைமகள் மணாளன் ஈசனைக்காணக்
       கைலாயம் செல்ல வேண்டுமெனின் அந்த ஈசன் வேண்டாம்
அலைமகள் மணாளன் கண்ணனைக் காணக்
       வைகுண்டம் செல்ல வேண்டிமெனின் அந்தக் கண்ணன் வேண்டாம்
கலைமகள் மணாளன் பிரம்மனைக் காணக்
       கரைகடந்து செல்ல வேண்டுமெனின் அந்தப் பிரம்மன் வேண்டாம்
மலைகள் சூழ் சதுரகிரியில் வாழும் அன்னபூரணி
       அன்புடம் அளிக்கும் அமுதம் போதும் எனக்கு