Tamil Poetry மரபுக் கவிதைகள்

பார்வதியின் தவம்ஈடு இணையற்றது
பார்வதியின் உணவு பழமும் இலையும்
பார்வதியின் அன்பு உலகெங்கும் பரவியது
பார்புகழ்ந்தது பார்வதியின் தவம்

வனமும் மலையும் அன்பால் நிறம்பியது
வனவிலங்குகள் அன்பைப் பொழிந்தன
வனராஜா சிங்கம் மானிடம் சிரித்தது
வனமே அன்பு மயம் ஆனது

அன்பின் சக்தி அகிலத்தினும் பெரியது
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்
அன்பின் வெப்பம் எலும்பையும் எரிக்கும்
அன்பைத் தடுப்பார் யார்?


அன்பிற்கு என்றும் தோல்வி இல்லை
அன்பிற்கு என்றும் வெற்றியும் இல்லை
அன்பு வெற்றி தோல்விக்கு அப்பாலுள்ளது
அன்பே சிவம் சிவமே அன்பு

பார்வதியின் தவம் விண்ணைத் தொட்டது
பார்வதியின் தவம் கைலாயம் சென்றது
பார்வதி மணாளன் சிவனைத் தொட்டது
பார்வதியைப் புரிந்தான் சிவன்

அன்பில் இணைந்தபின் அன்பே போதும்
அன்பில் இணைந்தபின் இணைப்பே போதும்
அன்பில் இணைந்தபின் வேறென்ன வேண்டும்
அன்பால் ஆனதே உலகு