Tamil Poetry மரபுக் கவிதைகள்

அன்னபூரணி ஒரு விளையாட்டுக்காரி.
என்ன விளையாடுவாள் என்பது
அன்னைக்கு மட்டுமே வெளிச்சம். நாம்
என்ன செய்வது இங்கு?

நாம் எல்லோரும் மானிடர்களே
நாம் நம் கடமைகளை மட்டும்
சோம்பல் இல்லாமல் இன்றுபோல்
நாம் செய்வோ மாக

உலகம் ஒரு நாடக மேடை அதில்
உலக மக்கள் நடிகர்கள் நாடகத்தை
உலகையாள்பவள் நடத்திகிறான்
பல காட்சிகள் உண்டு

எந்தக் காட்சிக்கு யார் யார் என்று
அந்தக் காட்சியை வடிவமைக்கும்
அந்தப் பூரணிக்குத்தான் தெரியும்
அந்தமாதிரியே நிற்க

நேற்று நானும் அவளும் நின்றோம் காட்சி
மாற்றிய பின்பு இங்கு இன்று நீயும் நானும்
நேற்றிருந்தவள் இன்றில்லை இன்றிருப்பவர்
மாற்றப்படுவர் இதுதான் நியதி

முக்கயமாய் தெரியவேண்டியது இதுதான்
செக்கிழுக்கும் மாடுகள் தான் யாம் நம்மை
செக்குச் செட்டி ஓட்டினால் ஓடவேண்டும்
செக்குச் செட்டி பாடெனில் பாடு

நேற்றைய நிகழ்வு நேற்றோடு போயிற்று
மற்றைய பலவும் இதுபோல் போய்விடும்
கற்றது எதுவும நம் கதைக்கு ஆகாது
பற்றற்று வாழ்வதே வாழ்வு