இன்று கதை ஒன்று சொல்வேன்
அன்ன பூரணியே அருள் புரிவாய்
என் கைகளில் மூலம் எழுதுவாய்
என்கதை எழுதிவிடு
காட்டில் ஒரு அழகிய குருவி
நாட்டில் குருவிக்குக் கூடுண்டு
காட்டில் ஒரு அழகிய மரம் உண்டு
காட்டு மரம் குருவியின் மரம்
குருவி தினமும் மரத்திற்கு வரும்
குருவி பாடும் ஆடும் சிரிக்கும்
குருவியின் அழகு அலாதியானது
குருவின் பாட்டும் அழகே
வேடன் ஒருவன் காட்டில் உண்டு
வேடனுக்குத் தேவைகள் இல்லை
வேடனுக்கு ஆசைகள் இல்லை
வேடனிடம் ஒன்றுமில்லை
ஒன்றுமில்லா வேடன் காட்டிற்கு வந்தான்
என்றும் வேடன் காட்டிற்கு வருவான்
இன்று வேடன் குருவியைப் பார்த்தான்
இன்று குருவியும் பார்த்தது
அழகிய குருவிக்கு வேடனைப் பிடித்தது
அழகிய குருவிக்கு ஏனென்று தெரியவில்லை
அழகிய குருவியை வேடனுக்குப் பிடித்தது
கிழட்டு வேடனுக்கும் புரியவில்லை
முன்பிறவிப் பிணைப்பு என்றொன்றுண்டு
பன்முறை வேடனும் பிறந்திருக்கிறான்
பன்முறை குருவியும் பிறந்திருக்கும்
என்சொல்ல இப்பிணைப்பை?
எப்பிறவியிவாவது ஒன்றாய்ப் பிறந்திருக்கலாம்
எப்பிறவியென்று இங்கு யாருக்கும் தெரியாது
அப்பனே ஈசனே இதுஎன்ன விளையாட்டு
அப்பனுக்கு இல்லையா வேலை?
வேடனை முன்பின் பார்த்ததில்லை குருவி
வேடனைப் பார்த்தால் குருவிக்குப் பயம்
வேடனைப் பிடித்த குருவிக்கு பிடித்தது
வேடனிடம் தெரியாத பயம்
வேடன் மரம் ஏறி ஏறி வருவானோ?
வேடன் பின்னே பின்னே வருவானோ?
வேடன் பிடிக்க வேண்டி வருவானோ?
வேடனுக்குப் புரிந்தது பயம்
வேடனுக்குப் பிடித்தது குருவியின் பாட்டு
வேடனுக்குப் பிடித்தது குருவியின் ஆட்டம்
வேடனுக்குப் பிடித்தது குருவியின் சிரிப்பு
வேடனுக்கு வேண்டாம் குருவி
புரிந்து கொண்டது குருவியும் இங்கு
புரிந்த குருவியும் குதூகலித்தது
புரிந்த குருவியும் கொண்டாடியது
புரிதலே உலகின் எல்லை
|