பொம்மைகள் தான் நீயும் நானும்
பொம்மைகள் தான் வானும் கடலும்
பொம்மைகள் தான் இரவியும் நிலவும்
பொம்மலாட்டக்காரன் பாட்டிற்குப்
பொம்மைகள் ஆடத்தானே வேண்டும்
பொம்மைகளும் நாம்தான் அந்தப்
பொம்மலாட்டக் காரனும் நாம்தான்
பொம்மைகள் கலங்கியாவதென்ன!
பொம்மலாட்டக்காரன் பாடட்டும்
பொம்மைகள் ஆடட்டும்
|