முண்டாசுப் புலவன் பாரதிக்கு
அண்டங்காக்கையும் அவன்சாதி
பெண்டாட்டிக்கு ஒருவாய் அந்த
அண்டங்காக்கையும் ஒருவாய் என
அண்டமும் அகிலமும் புகழ தரணியில்
கண்மூடும் வரை வாழ்ந்தவன்
பஞ்சம் அவன் வாழ்வு பெண்டாட்டிக்கு
கொஞ்சம் கூட உணவில்லையெனினும் நெஞ்சுயர்த்தி
வீதியில் வீறு நடை போட்டான் எட்டயபுரத்தாள்
சாதிகள் இல்லையடியென்றான்
|