பந்தம் வேண்டாம் பாசம் வேண்டாம்
சொந்தம் வேண்டாம் சோகம் வேண்டாம்
எந்தன் சிந்தையில் நாளும் பொழுதும்
இந்த நொடி எனக்கு முக்கியம்
போன நொடி போயேவிட்டது அது
வானம் இடிந்தாலும் வாரா என்றுணர்ந்து
எந்த நொடி எப்படியிருக்குமோ ஆனால்
இந்த நொடி எனக்கு முக்கியம்
சென்றதை எண்ணி எண்ணி அழாதே
உன்தன் சிந்தைையைக் கலக்காகே
அன்னபூரணியின் அருள் பெற்ற
எனக்கு இந்த நொடி முக்கியம்
முக்கியம் முக்கியம் இந்த நொடி
மக்களே மாந்தரே எனக்கு முக்கியம்
உந்தன் அடிபோற்றும் எனக்கு
இந்த நொடி எனக்கு முக்கியம்
|