சின்னச் சின்ன சாளரம்
நான் பார்க்கும் சாளரம்
என் காட்சி எனக்கு மட்டும்
உன் காட்சி உனக்கு மட்டும்
என் காட்சி உனக்கில்லை
உன் காட்சி எனக்கில்லை
என் உலகம் என்னது
உன் உலகம் உன்னது
என் உலகில் இருக்கும் நீ வேறு
உன் உலகில் இருக்கும் நான் வேறு
என்னை நீ பார்த்ததில்லை
உன்னை நான் பார்த்ததில்லை
என்னைப் பார்க்க உனக்கு ஆசை
உன்னைப் பார்க்க எனக்கு ஆசை
சின்னச் சாளரம் நமக்குத் தடை
சின்னச் சாளரத்தைத் தகர்ப்போம்
உன்காட்சியும் என்காட்சியும்
ஒன்றாகட்டும் நீயும் நானும்
ஒன்றாவோம் சாளரம்
என்றொன்று நமக்குத் தேவையில்லை
ஒன்றாய் இருவரும்
நின்றபின் மீந்திருப்பதெது?
நீயும் இல்லை நானும் இல்லை
பேயும் இல்லை பிசாசும் இல்லை
கடவுளும் இல்லை காட்சியும் இல்லை
கடந்தபின் எதுவும் இல்லை
எதுவும் இல்லாதவனுக்கு எல்லாம் உண்டு
இது அறிந்தவன் எல்லாம் அறிந்தவன்
|