யாருக்காகக் காத்திருக்கிறாய் மழையே இந்த
ஊருக்காகப் பெய்தாலென்ன மழையே இங்கு
நல்லவரர் யாருமே இல்லையா மழையே அல்லது
வல்லவர்கள் தான் இல்லையா மழையே
நாங்கள் நல்லவர்களும் இல்லை அதேநேரம்
நாங்கள் கெட்டவர்களும் இல்லை இங்கு
எல்லோரும் வேடம் தான் போடுவோம் நாங்கள்
பல்லோரும் பாராட்டப் போடுவோம்
குழப்பமாய் இருக்கிறதா மழையே உன்னைக்
குழப்புவது எங்கள் நோக்கம் அல்ல எங்கள்
பிழைப்பு அப்படி வேடம்தான் வாழ்க்கை
அழைக்காமல் வந்து பொளிவாய் மழையே
கூழ் இன்னும் ஒரு நாளுக்குத்தான்
கூழ் ஊற்ற இனியாரும் இல்லை
கூழ் வேண்டும் என்றால் நானிருக்கிறேன்
கூழ் காய்ச்சத் தெரியும் எனக்கு
மாரியே மகமாயி யாரும் இல்லையென்று
மாரி மழையை நிறுத்திவிடாதே
பாரினில் உனக்கெள்றும் கூழ் உண்டு
யாரில்லை யெனினும் நானுண்டு உனக்கு
|