அன்னை அன்னபூரணிக்கு முழுக்கு
அன்னையின் நெஞ்சில் பாவாாடை கட்டி
அன்னையின் பண்டாடை களைந்து
அன்னை சிரசி லெண்ணை தோய்த்து
அன்னை யுடலெங்கும் தடவிவிட்டு
அன்னைக்குச் சிகைக்காய் இட்டு
அன்னையின் அழுக்கு பிசுக்கு நீக்கி
அன்னை தலையில் குடம் நீரூற்றி
அன்னை உடலெங்கும் மஞ்சளிட்டு
அன்னைக்கு அரிசி மாவு தயிர் இட்டு
அன்னைக்குக் குடம் பால் தலையிலிட்டு
அன்னைக்கு முழுக்கு செய்வேன் நான்
அன்னைக்குப் பன்னீரும் இடுவேன்
அன்னைக்குப் பட்டுப் பாவாடை கட்டிப் பின்
அன்னைக்குப் புத்தாடையிட்டுப் பொட்டிட்டு
அன்னைக்கு மல்லி மாலையிட்டு வணங்க
அன்னையே அருள்புரி நீயே
|