Tamil Poetry மரபுக் கவிதைகள்

மனைவியை உயரென்னுங்கடா -அவள்
காதலை நாளுமே போற்றுங்கடா !
அனைத்தும் வாங்கிக் கொடுங்கடா -நல்ல
வாழ்வை நித்தம் வாழுங்கடா!

அன்பினால் மனைவியை ஆளுங்கடா-தினம்
ஆனந்த வெள்ளத்தில் முழ்குங்கடா!
துன்பத்தை வாழ்க்கையில் போக்குங்கடா-நல்ல
தூய்மையை நாளுமே ஆக்குங்கடா!

கற்பினைக் கண்ணெனப் பேணுங்கடா-நல்ல
கருணையை நெஞ்சிலே பூணு ங்கடா!
அற்புதக் குழந்தைகளை பெறுங்கடா-அவர்களை
அருமையாய் வளர்த்தின்பம் காணுங்கடா!

இல்லத்தை சொர்க்கமாய் மாற்றுங்கடா-அங்கு
இணையில்லா இன்பத்தை ஊற்று ங்கடா!
வெல்லத்தைப் போலன்பாய் பேசுங்கடா-என்றும் !
வீணான கொள்கையை வீசுங்கடா!

அரைகுறை ஆறிவினைத் தள்ளுங்கடா -நம்ம
அழகான பண்பாட்டைக் கொள்ளுங்கடா!
கரையில்லா இன்பத்தைக் காணுங்கடா-என்றும்
மனைவியை உயிராய் பேணுங்கடா..!