Tamil Poetry மரபுக் கவிதைகள்

காளியின் நெஞ்சில் பாவாாடை கட்டிக்
காளியின் பழைய ஆடை களைந்து
காளி தலையி லெண்ணை தேய்த்து
காளியின் உடலெங்கும் தடவிவிட்டுக்
காளியின் உடலின் சிகைக்காய் இட்டு
காளியின் அழுக்கு பிசுக்கு நீக்கி
காளியின் தலையில் குடம் நீரூற்றி
காளியின் உடலெங்கும் மஞ்சளிட்டு
காளிக்கு அரிசி மாவு தயிர் இட்டு
காளிக்குக் குடம் பால் தலையிலிட்டு
காளிக்கு முழுக்கு செய்வேன் நான்
காளிக்குப் பன்னீரும் இடுவேன்
காளிக்குப் பட்டுப் பாவாடை கட்டிப் பின்
காளிக்குப புத்தாடையிட்டுப் பொட்டிட்டு
காளிக்கு மலர்மாலையிட்டு நகையிட்டு
காளியின் மனம் குளிரச் சினம் தணியக்
காளியை வணங்குவேன் நான்