Tamil Poetry மரபுக் கவிதைகள்

கோபமி ருக்குமிடம் அன்பிருக்கு மென்பது
கோபப் படுபவன் பேச்சு

கொல்லற்கப் பெண்சிசு கொல்லற்க அப்படிக்
கொல்லின் அழியும் உலகு

தொங்கேல் படியினில் தொங்கேல் விரும்பித்
தொங்கினால் நீங்கும் உயிர்

குடிக்கும் மனிதா படிக்கும் மகனுக்குக்
குடிக்கச் சுடுகஞ்சி தா


தலைக்கவசம் போடவும் தன்னுயிர் காக்க உலைவைக்கா தேயுன் னுயிர்க்கு

நாட்டின் கண்மணியாம் மாணவர்களை நாம்
வீட்டில் பேணுவோம் நன்கு